வீரியம்
கூடிய எபேலா வைரஸ், நுரையீரல்
புற்றுநோய் , பக்க வாதம் விபத்துகள்
மற்றும் வன்முறைச்
சம்பவங்களில் ஏற்படும் காயங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களைப் போன்ற தோற்றப்பாடுகளைக் கொண்டவையாக
இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த ரோபோக்களைப் பயன்படுத்தி நோயாளர்களது நோயின் தன்மையைக் கண்டுபிடிக்கவும்
அதற்கேற்ப சிகிச்சை வழங்கவும் முடியும். இந்த ரோபோ நோயாளி (ஏதட்ச்ண கச்tடிஞுணt குடிட்தடூச்tணிணூ)
சராசரியான நோயாளியொருவரின் குறைபாடுகளுக்கான பல்வேறு அறிகுறிகளைக் காட்டக்
கூடிய வகையிலே இந்த ரோபோக்களின்
செயற்பாட்டுத் திட்டம் நிரல்படுத்தப்பட்டுள்ளது.
சுவாசம்,
ஒட்சிசனை உள்ளெடுத்து , காபனீரொட்சைட்டை வெளிவிடல்), நாடி, நாளம் மற்றும்
இதயத் துடிப்புகள், இரத்த அழுத்த அளவீடுகள்
என ஒவ்வொன்றும் மனிதனைப் போல இடம்பெறுவதுடன் அவற்றினை
பரிசோதனை செய்தும் பார்க்கக்
கூடியதாக உள்ளன.
அதேபோல ஒளிக்கேற்ப உறுத்துணர்ச்சி
காட்டல் அதிக ஒளி தாக்கினால்
கண்களை மூடிக் கொள்ளல் , கண்
அசைவுகள் போன்றவற்றையும் இந்த ரோபோக்கள் செய்கின்றன.
சிகிச்சைகளுக்கு ஏற்ப நோயின் தன்மையை
வெளிப்படுத்தல் மற்றும் சரியான மருத்துவக்
கண்காணிப்புகளுக்கேற்ப அறிகுறிகளை சரி செய்தல் போன்றவையையும்
இந்த ரோபோக்கள் செயற்படுத்துகின்றன.
செக்கனுக்கு செக்கன் வேறுபட்ட சிகிச்சைகளுக்குரிய
விளைவுகளை கணினி முறைமையினூடாக
கட்டுப்படுத்தக் கூடியதாக உள்ளமையே இந்த ரோபோக்களின் சிறப்பாகும்.
உதாரணமாக,
நரம்பு மூலமாக மருந்து வழங்கல்
மற்றும் சுவாசச் சுற்றோட்டம் போன்ற
நடைமுறைகளுக்கு நோயாளி ரோபோக்களால் (இககீ)
பதிலளிக்க முடியும். இந்த முறையிலே மருத்துவ
மாணவர்களால் விடப்படும் தவறுகளால் ஏற்படும் உயிர் ஆபத்துகள் மற்றும் அங்கவீனங்கள்
தவிர்க்கப்படுகின்றன. அதேவேளை, முக்கியமான நிஜ வாழ்க்கைச் சூழலைக்
கையாளவும் மருத்துவத்தின் மகத்துவத்தையும் சிறப்புத் தன்மையையும் மருத்துவ மாணவர்களுக்கு தெளிவாக உணர்த்தவும் முடியும்.
புதிதாகத்
திறக்கப்பட்ட ஸ்காட்டிஷ் மருத்துவ உருவகப்படுத்துதல் மையத்தில் வைத்து ஏச்ணூஞீ ச்ணஞீ
ண்ணிஞூt ணூதஞஞஞுணூடிண்ஞுஞீ ணீடூச்ண்tடிஞி மூலப்
பொருட்களை கொண்டு இந்த ரோபோக்கள்
உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் கம்பிகள், மோட்டார்கள், குழாய்கள், ரப்பர் குழாய்கள், ஸ்பீக்கர்கள்
மற்றும் கணினி சிப் போன்றனவும்
இந்த ரோபோக்களுள் பொருத்தப்பட்டுள்ளன.
லார்பேட்டிலுள்ள ஃபோர்த் வெல்லி ரோயல்
மருத்துவமனையில் (ஊணிணூtட ஙச்டூடூஞுதூ
கீணிதூச்டூ ஏணிண்ணீடிtச்டூ) பயிற்சி
பெறும் மாணவர்களுக்கு உதவியாக இந்த ரோபோக்கள்
வழங்கப்படவுள்ளதாக வடிவமைப்பாளர் டாக்டர் டோனா பர்ஸர்
தெரிவித்துள்ளார்.
இம்மாணவர்கள் ரோபோக்களில் மேற்கொள்ளும் செயல்முறை பயிற்சிகளின் மூலம் பயனுள்ள நடைமுறை
அனுபவங்களைப் பெற்றுக் கொள்வார்களென டோனா நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
புத்தகங்களிலுள்ளவற்றை வாசித்துக் கற்பதை விட கற்றல்
உபகரணங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் செயல் முறைப் பயிற்சிகளின்
மூலம் தெளிவான அனுபவ அறிவினைப்
பெற்றுக் கொள்ள முடியும்.
இதேவேளை,
நாம் ஏனையவருடன் பேசுவதைப் போல இந்த ரோபோக்களும்
பேசக் கூடிய வகையிலே குரல்கள்
பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும்
டோனா தெரிவிக்கின்றனர்.
இஅஉ சுகாதார
பாதுகாப்பு அமைப்பினால் வடிவமைக்கப்பட்ட இவை உயர் தொழில்
நுட்ப ரீதியான ரோபோ குடும்ப
உறுப்பினர் வகைகளில் ஒன்றாகும். ( டடி tஞுஞிட ஞீதட்ட்டிஞுண்)
.
அவசர பிரிவு மருத்துவர்கள்
மற்றும் மருத்துவ தாதியர்கள் பயிற்சி பெற உதவும்
இந்த ரோபோக்கள் குருதி வழங்கல் மற்றும்
நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன. இதேவேளை, கர்ப்பிணிப்
பெண் , இரு சிறுவர்கள் மற்றும்
பிறந்த சிசு போலவும் ரோபோக்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. உண்மையான கர்ப்பிணிப் பெண் ,பிறந்த குழந்தை
ஆகியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கோளாறுகள் என்பவற்றை இந்த ரோபோக்களும் வெளிப்படுத்துகின்றமை
சிறப்பு அம்சமாகும்.
16 இறாத்தல் நிறையுடைய "சிம்' எனப் பெயரிடப்பட்டுள்ள
ரோபோ குழந்தை கெஞ்சுதல், அழுதல்,
சிரித்தல் , பயப்படுதல் , வாயில் எச்சில் சுரத்தல் , கண்களிலிருந்து கண்ணீர் வெளியாகுதல் போன்ற
செயல்களையும் செய்கின்றது. அதேவேளை, அசைவுகள் மற்றும் மூச்சு வாங்குதல்
போன்ற உணர்வுகளின்
வெளிப்பாடுகளும் சிம்மிடம் உள்ளன.
சிம்மினை பார்ப்பவர்களுக்கு
அதுவொரு உண்மையான குழந்தை என்ற எண்ணமே
ஏற்படும். ரோபோ குழந்தையில் பொருத்தப்பட்டுள்ள
இறப்பர் குழாய் மாதிரிகளினூடாக சுவாச
நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
நோயாளியின்
பாதுகாப்பு மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த
ரோபோக்கள் மூலம் மருத்துவ மாணவர்கள்
சிறப்பான பயனைப் பெறுவார்கள் என
அமைப்பின் பணிப்பாளர் டாக்டர் மிக்கேல் மனிபெனி
தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக