சனி, 30 ஜூன், 2012

அறிவியலின் சிக்கல்களுக்கு கணித ரீதியில் விடையளித்த ஜன்ஸ்டீன்

 நாளை ஜன்ஸ்டீனின்

133 ஆவது பிறந்த தினம்

சா .சுமித்திரை

20 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற இயற்பியல் மாமேதையான ஆல்பர்ட் ஜன்ஸ்டீனின்  133 ஆவது பிறந்தநாள் நாளையாகும். 1879 ஆம் ஆண்டு மார்ச்  14 ஆம் திகதி பிறந்த இவர் சார்புக் கோட்பாட்டை முன் வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை, அண்டவியல் என்பவற்றில் பாரிய பங்களிப்பை செய்து அறிவியல் உலகிற்கு சேவையாற்றியுள்ளார்.

 ஒளிமின் விளைவைக் கண்டு பிடித்து விளக்கியதுடன், சார்புக் கோட்பாட்டுக் கொள்கையையும் முன் வைத்தமையால் ஜன்ஸ்டீன் என்ற பெயர் இன்றைய காலத்திலும் பேசப்படுகிறது.

அதே வேளை 1999 இல் புத்தாயிரமாம் ஆண்டு குறித்து ரைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட சிறப்பிதழில் ஜன்ஸ்டீனுக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்னும் பெயரை வழங்கிக் கௌரவித்திருந்தது.

 ஜெர்மனியில் வுர்ட்டெம்பர்க் உள்ள உல்ம் என்னும் நகரில் ஹேர்மன் ஜன்ஸ்டீன், போலின் கோச் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த ஜன்ஸ்டீன் சிறு வயது முதலே கணிதம், அறிவியல் துறைகளில் அதிகளவு ஆர்வம் காட்டி வந்தார். இவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது ஒரு முறை இவரது தந்தை ஒரு சட்டைப் பையில் வைக்கக் கூடிய திசை காட்டியொன்றைக் கொடுத்தார். அவ் வயதிலேயே காந்த ஊசியில் ஏதோவொரு தாக்கம் உருவானதைப் புரிந்து கொண்டதுடன் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும் பொழுது போக்காக வடிவமைத்து வந்தார்.

1896 இல் பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட ஜன்ஸ்டீன் சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள பல் தொழில் நுட்பக் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி கற்றார். தொடர்ந்து படிப்பு முடிந்தும் படிப்புக் கேற்ற வேலை கிடைக்காமையால் சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் தொழில் நுட்ப உதவிப் பரிசோதகராக இணைந்து கொண்டு தனது மேலதிக நேரத்தில் கணித ஆராய்ச்சிப்  பணிகளைத் தொடர்ந்தார்.

1905 ஆம் ஆண்டு ஜன்ஸ்டீனால் எழுதி வெளிவந்த முதலாவது ஆய்வுக் கட்டுரையில் " நிலையான திரவத்தில்  தொங்கும் மிகச் சிறிய துணிக்கைகளின் வெப்ப மூலக் கூற்றுக் கொள்கையினால் தொழிற்படும் இயக்கத்தில்" என பிரௌனியன் இயக்கம் தொடர்பான ஆராய்ச்சியை விபரித்திருந்தார். அப்போது சர்ச்சைக்குள்ளாகியிருந்த திரவ இயக்கவியலை பயன்படுத்தி அணுக்கள் இருப்பதற்கான அனுமான ரீதியான ஆதாரமாகக் கொள்ளலாம் என இக்கட்டுரை மூலம் நிறுவியிருந்நார். அதே வேளை அப்போது சர்ச்சையிலிருந்த இன்னொரு கொள்கையான புள்ளி விபரப் பொறிமுறையினையும் (குtச்tடிண்tடிஞிச்டூ  Mஞுஞிடச்ணடிஞிண்) இக்கட்டுரையில் தெளிவு படுத்தியிருந்தார்.

அக்காலத்தில் அணுக்கள் என்பது ஒரு பயன்பாட்டுக் கோட்பாடாகவே அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் கூட அணுக்களின் நிலவுகை தொடர்பான பாரிய விவாதங்களும் நடைபெற்று வந்தன.  அந்நிலையிலேயே அணுக் கொள்கை தொடர்பான ஜன்ஸ்டீனின் புள்ளி விபர ரீதியான விளக்கத்தின் மூலம் எளிய நுணுக்குக் காட்டியினூடாக  அணுக்களை எண்ணும் வாய்ப்பு ஆய்வாளர்களுக்கு கிடைத்தன எனலாம்.

 விஞ்ஞானி வில்கெலம் ஒஸ்ட்வால்ட் அணுவுக்கெதிரான கொள்கையை கொண்டிருந்தார். இவர் ஜன்ஸ்டினின் பிரௌனியன் இயக்கம் தொடர்பான தெளிவான விளக்கம் காரணமாகத்தான் அணு தொடர்பான நம்பிக்கையை பெற்றதாக தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார்.

 அதே போல ஜன்ஸ்டீன் இரண்டாவது ஆய்வுக் கட்டுரையில் " ஒளியின் உற்பத்தி மற்றும் மாற்றீடு தொடர்பான ஓர் ஆய்வு ரீதியான நோக்கம் ( Oண ச் ஏஞுதணூடிண்tடிஞி ஙடிஞுதீணீணிடிணt இணிணஞிஞுணூணடிணஞ் tடஞு கணூணிஞீதஞிtடிணிண ச்ணஞீ கூணூச்ணண்ஞூணிணூட்ச்tடிணிண ணிஞூ ஃடிஞ்டt) என்னும் ஒளிச்சக்தி  சொட்டு (ஃடிஞ்டt ஞ்தச்ணtச்)  கருது கோளை முன்வைத்ததுடன் இது எவ்வாறு ஒளிமின் விளைவு போன்ற விடயங்களை விளக்க உபயோகிக்கலாம் எனவும் விபரித்துள்ளார்.

 இக் கருது கோளில் ஒளிச் சக்தி  ஒரு குறித்த அளவுடைய தொடர்ச்சியற்ற சக்திச் சொட்டுக்களாகவே உறிஞ்சப்படவோ, கடத்தப்படவோ முடியுமென கருதும் போது மாக்ஸ் பிளாங்கின் கரும் பொருட் கதிர்ப்பு விதியையும்

இவ் ஆய்வுக் கட்டுரை வலுப்படுத்தியது. ஒளி உண்மையில் தனித்தனி சக்திப் பொட்டலங்களாலேயே உருவாக்கப்பட்டது என்ற கொள்கை மூலம் ஜன்ஸ்டீனினால் மர்மமாகவிருந்த ஒளிமின் விளைவை விளக்க முடிந்தது எனலாம்.

 ஒளியின் சக்திச் சொட்டு கருது கோளானது ஜேம்ஸ் மாக்ஸ்வெல்லின் மின் காந்த இயக்கத்துக்கான சமன்பாட்டினால் பெறப்படும் ஒளியின் அலைக்கொள்கை யோடு முரண்பட்டிருந்ததுடன் பௌதீகத் தொகுதியிலுள்ள சக்தி துணிக்கைகளை மேலும் மேலும் பிரிக்க முடியும் என்ற கருத்தும் முரண்பட்டன. எனவே தான் ஜன்ஸ்டீனின் ஒளியின் விளைவுக்கான சமன் பாடுகள் மிகச் சரியானவை என பரிசோதனைகள் மூலம் நிரூபித்த பின்னரும் கூட அவரது சமன்பாட்டுக்கான விளக்கத்தை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.  எனினும் ஒளி மின்னியலில் அவருடைய உழைப்பு  வியந்துரைக்கப்பட்ட பின்னரே பெரும்பாலான பௌதீகவியலாளர்கள் அவருடைய சமன்பாடு சரி எனவும் சாத்தியம் எனவும் ஏற்றுக் கொண்டதுடன் 1921 ஆம் ஆண்டு இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஜன்ஸ்டீனின் சக்திச் சொட்டுக் கொள்கை ஒளியின் அலைத் துணிக்கையின் இரட்டைத்தன்மை அதாவது பௌதிகத் தொகுதியின் அலைத் தன்மை, துணிக்கைத் தன்மை என இரு வேறு பட்ட இயல்புகளை காட்ட வல்லன என்ற கருத்தினை வலியுறுத்து கின்றது.

 அதேபோல அவருடைய மூன்றாவது ஆய்வுக் கட்டுரை இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் என்னும் தலைப்பில் அமைந்திருந்தன. இக்கட்டுரையில் நேரம், தூரம், திணிவு, சக்தி தொடர்பான விஷேட தொடர்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியதுடன் மின் காந்தவியலுடன் தொடர்புபட்டதாகவும் , புவியீர்ப்பு விசையை தவிர்த்தும் எழுதியிருந்தார்.
மைக்கல்சன் மோர்லி பரிசோதனையில் (Mடிஞிடஞுடூண்ணிண - Mணிணூடூஞுதூ ஞுதுணீஞுணூடிட்ஞுணt) ஒளியலை பயணம் செய்ய நீர், காற்று போன்ற ஊடகம் அவசியம் இல்லை என்பதை நிரூபித்த போது உருவான குழப்பத்தை இவருடைய விஷேட தொடர்புக் கொள்கை தீர்த்து வைத்தது. இதன் மூலமே ஒளியின் வேகம் மாறாத அதே வேளை அது அவதானியின் இயக்கத்தில் தங்கியதல்ல என்பது நிரூபணமானது. அதே போல எத்தனையோ விஞ்ஞானிகளின் பரிசோதனை ஊகங்களை இவருடைய கணித சமன்பாடுகள் தீர்த்து வைத்தன என்பதை அறிவியல் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கணித திறமை கொண்ட ஒரு கோட்பாடு இயற்பியல் அறிஞராக விளங்கிய ஜன்ஸ்டீன் தனது வாழ்வில் அதிகளவான பகுதியை அறிவியலுக்காக அர்ப்பணித்தார். அறிவியலின் சிக்கல்களுக்கு கணித ரீதியில் விடையளித்த ஜன்ஸ்டீன் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி தனது 76 ஆவது வயதில் இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக