சனி, 30 ஜூன், 2012

எக்ஸ்ரேயைவிட எளிமையான சிறுநீர் பரிசோதனை மூலம் அதிக தகவல்கள்




 அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிப்பு

எலும்புகளில்ற ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் எக்ஸ் கதிர்களை விட எளிய சிறுநீர் பரிசோதனை மூலம் அதிகளவிலான தகவல்கள் வெளிப்படுத்தப்படுமென அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாசா நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவினை கடந்த வாரம் ஆய்வாளர்கள் வெளியிட்டிருந்தனர்.

 விண்வெளி பயணங்களின் போது விண்வெளி வீரர்கள் தமது உடல் எலும்புகள் இல்லாதது போன்ற பாரமற்ற நிலைமையை உணர்வதற்கு அவர்களுடைய விண்வெளிக்கு பயன்படுத்தப்படும் உடைகளுடன் இத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. எலும்புகளில் தாக்கும் புற்று நோயிலிருந்தோ அல்லது எலும்பு தேய்வுகளிலிருந்தோ பாதிக்கப்படும் நோயாளிகள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.

 ஏற்கனவே, அதிக எண்ணிக்கையான எலும்பு இழப்பு ஏற்பட்ட போதோ அல்லது எலும்பு தேய்வினை எதிர்கொள்ள நேரிடும் போதோ இப் பரிசோதனை மூலம் தீர்வு பெற முடியுமென அரிசோனா பிராந்திய பல்கலைக்கழகத்தின் உயிரி இரசாயனவியல் மற்றும் இரசாயனவியல் பேராசிரியரும், சிரேஷ்ட எழுத்தாளருமான அரில் அன்பர் தெரிவித்துள்ளார்.

இவற்றில் சிலவற்றை புதிதாக இணைத்து விரிவாக்கியுள்ளோம். இதில் தொழில் நிபுணத்துவம் இல்லை. நாசாவின் மூதலீட்டுடனான பணி எங்களுடைய ஆராய்ச்சியின் ஊடாக சிறப்பான விளைவு கிடைத்துள்ளதென பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

திணிவில் வேறுபட்ட மூலக் கூறு அணுக்களின் அடிப்படையிலே கல்சியம் கணியங்களின் படிமுறைகள் அளவிடப்படுகின்றன. கனியுப்புக்களின் சமநிலையினை அடிப்படையாக கொண்டு குறிப்பிட்ட எலும்பிற்கு பலத்தினை நோயாளியின் சீறுநீர் ஊடாக கனியங்கள் பரிமாற்றப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக